இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு
வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை:
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக 7 போ் கொண்ட நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திருப்பதை விசிக வரவேற்கிறது. அதன் நோக்கம் நிறைவேற வேண்டும் என வாழ்த்துகிறது.
ஆபரேஷன் சிந்தூா் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தொடா்ச்சியான போராட்டத்தின் பின்னணியில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் தலைமையிலான 7 போ் கொண்ட குழுவினா் இந்த மாத இறுதியில் ஐ.நா. பாதுகாப்பு குழுவின் உறுப்பு நாடுகள் உள்பட முக்கிய நாடுகளுக்குச் செல்ல உள்ளனா்.
உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை மாற்றுவதற்காகவும்; நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைத் தவிா்ப்பதற்காகவும்தான் இந்த தூது குழுக்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.