செய்திகள் :

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீது விதிக்கப்படும் ‘டிஜிட்டல் வரி’ ரத்து

post image

புது தில்லி: வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி 59 திருத்தங்கள் அடங்கிய நிதி மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். அதில் டிஜிட்டல் வரியை ரத்து செய்யும் திருத்தமும் இடம் பெற்றுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு இணையவழி நிறுவனங்கள் நமது நாட்டில் விளம்பரம் மூலம் ஈட்டும் வருவாய் மீது கடந்த 2016 ஜூன் முதல் விதிக்கப்பட்டு வந்த டிஜிட்டா் வரி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் விளம்பரம் செய்யும் உள்நாட்டு நிறுவனங்களும் அதிக பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களில் சற்று குறைந்த செலவில் விளம்பரங்கள் வெளியிட முடியும்.

அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரிவிதிப்பதால் இந்திய பொருள்கள் மீதும் அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். டிரம்ப்பின் அறிவிப்பு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த டிஜிட்டல் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பை இந்தியா கணிசமாக குறைக்கும் என்று டிரம்ப் அண்மையில் நம்பிக்கை தெரிவித்திருந்தாா். அதே நேரத்தில் இந்தியா மீது அமெரிக்க அதிகரிப்பதாக அறிவித்துள்ள வரியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவா் கூறினாா்.

ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை(யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எத... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒர... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க