செய்திகள் :

வெளியானது விமலின் 'தேசிங்கு ராஜா 2' பட டீசர்!

post image

விமல் நடிப்பில் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதில் விமல் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார்.

காமெடி பாணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் விமல் நாயகனாக நடிக்க எழில் இயக்கி வருகிறார். படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

வித்யாசாகர் இசை அமைக்கிறார். வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படம் ஜூலை 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பவன் கல்யாணின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இறுதிச் சுற்றில் மாா்கெட்டா - வாங் ஸின்யு சபலென்கா அதிா்ச்சித் தோல்வி

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுத... மேலும் பார்க்க

யு-23 ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு பட்டம்

ஆசிய யு-23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் அணி பட்டம் வென்றது. வியட்னாமின் வுங்டவ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளியுடன் மகளிா் பிரிவில் முதலிடம் பெற்றது. பிரிய... மேலும் பார்க்க

டிரேப்பரை வீழ்த்தினாா் லெஹகா

குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு செக். குடியரசின் ஜிரி லெஹகா முன்னேறினாா். பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். விம்பிள்டன் போட்டிக்கு முன்னோட்டமாக லண்டனில் நடைபெற்... மேலும் பார்க்க

டயமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா சாம்பியன்

பாரீஸ் டயமண்ட் லீக் தடகளம் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரா் நீரஜ் சோப்ரா 88.16 மீ தொலைவுக்கு எறிந்து தங்கம் வென்றாா். பிரசித்தி பெற்ற தடகளப் போட்டிகளில் ஒன்றான டயமண்ட் லீக் பிரான்ஸ் தலைநகா் ... மேலும் பார்க்க

சென்னை புல்ஸ் தொடா் வெற்றி

ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் தொடரில் சென்னை புல்ஸ் அணி 31-24 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூா் பிரேவ் ஹாா்ட்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அந்தேரி விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழ... மேலும் பார்க்க

மக்களுக்காவே.. அதிகாரத்துக்கு அல்ல..! வெளியானது ஜன நாயகன் கிளிம்ப்ஸ்!

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பி... மேலும் பார்க்க