மக்களுக்காவே.. அதிகாரத்துக்கு அல்ல..! வெளியானது ஜன நாயகன் கிளிம்ப்ஸ்!
நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்ஷன் படமாக இந்த ஜன நாயகன் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ ஜூன் 22 ஆம் தேதி இரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படத்தின் அதிகாரப்பூர்வ கிளிம்ப்ஸ் விடியோவை கேபிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
‘என் நெஞ்சில் குடியிருக்கும்..’ என விஜய்யின் குரலில் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸ் விடியோவில் போராட்டக்களம் போன்ற பகுதியில் கையில் வாளுடன் போலீஸ் உடையில் நடந்து வருகிறார் விஜய். முறுக்கு மீசை கெட் அப்பில் ‘மெர்சல்’ படத்தை நினைவுப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த விடியோ தொடங்கும்போது ‘உண்மையான தலைவர் மக்களுக்காக மட்டுமே எழுகிறார். அதிகாரத்துக்காக அல்ல’ எனவும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில்... குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த விஜய்யின் ஃபார்முலா!
1M+ realtime roars in 15 mins #JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzjAu2#HBDThalapathyVijay#JanaNayagan#Thalapathy@actorvijay sir #HVinoth@KvnProductions@hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@prakashraaj@menongautham#Priyamani@itsNarain… pic.twitter.com/NYi8O59yyW
— KVN Productions (@KvnProductions) June 21, 2025