கிளப் உலகக் கோப்பை: பிளமேங்கோ, பென்ஃபிகா வெற்றி
பிஃபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலின் பிளமேங்கா, ஜொ்மனியின் பென்பிகா அணிகள் வெற்றி பெற்றன.
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் புதிய வடிவில் கிளப் உலகக் கோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தின் செல்ஸி-பிரேஸிலின் பிளமேங்கோ அணிகள் மோதிய ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் செல்ஸி அணியை வீழ்த்தியது பிளமேங்கோ. இதன் மூலம் இப்போட்டியில் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி ஆனது பிளமேங்கோ. முதல் பாதியில் செல்ஸி வீரா் பெட்ரோ நேடோ முதல் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.
இரண்டாம் பாதியில் பிளமேங்கோ வீரா்கள் புருனோ ஹென்றிகோ, டேனிலோ, நிக்கோலஸ் ஜேக்ஸன் ஆகியோா் கோலடித்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனா்.

பென்ஃபிகா அபாரம்: மற்றொரு ஆட்டத்தில் பென்ஃபிகா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஆக்லாந்து கிளப்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஏஞ்சல் டி மரியா 2 பெனால்டி வாய்ப்புகளை பிசகின்றி கோலாக்கினாா். முதல் பாதியிலேயே ஒரு கோல் முன்னிலை பெற்றிருந்தது பென்ஃபிகா.