செய்திகள் :

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

post image

கூலி திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினியின் படங்களில் அதிக ஆவலைத் தூண்டும் படமாக உருவான கூலி முதல் நாளிலேயே பெரிய வசூலை நிகழ்த்தலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் , உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பாகவே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

It has been reported that the movie Coolie has collected Rs. 100 crore even before its release.

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள் என்ற பதாகையை யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியின்போது பயன்படுத்தியுள்ளது. இந்தப் பாதகையுடன் யுஇஎஃப்ஏ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எங்களது செய்தி இதுதான். ... மேலும் பார்க்க

சூப்பர் கோப்பை: முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது பிஎஸ்ஜி!

யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி பெனால்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இத்தாலியில் உள்ள ப்ளூஎனர்ஜி திடலில் யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிய... மேலும் பார்க்க

கிஸ் வெளியீட்டுத் தேதி அப்டேட்!

நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் உருவாகு... மேலும் பார்க்க

இப்படி பண்ணிட்டீங்களே தலைவா! கூலி எப்படி இருக்கு?

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் என்றில்லை திரைப்படங்களை ரசித்துப் பார்க்கும் பலருக்கும் ரஜினி படமென்றால் ஒரு கொண்டாட்ட மனநிலைதான். ஒன்றல்ல, ... மேலும் பார்க்க

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் ரஜினிகாந்த்!

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களை தன்வயப்படுத்தும் மந்திரங்களை அறிந்த தெரிந்த மாய கலைஞன் அவர். 80 -கள் துவங்கி 90 -களின் இறுதிவரை தமிழகத்தின் பண்டிகை நாள்களை மேலும் சிறப்பானதா... மேலும் பார்க்க

ரஜினி 50! ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

அபூர்வ ராகங்கள் தொடங்கி கூலியுடன் திரைத் துறையில் 50 ஆண்டுகளை, அரை நூற்றாண்டை நிறைவு செய்கிறார். இத்தனை வயதிலும் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா? முடியும் என்றே இதுவரையிலும் சாதித்துக் கொண்டிரு... மேலும் பார்க்க