வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!
வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
வெள்ளக்கோவில் அருகே புதிய மும்முனை மின் பாதை பயன்பாட்டை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெள்ளக்கோவில் உப கோட்டத்துக்குள்பட்ட குருக்கத்தி 11 கே.வி. மின் பாதை பகுதியில் 24 மணி நேரமும் தேவையான அளவுக்கு மின்சாரம் வழங்க முடியாத நிலை இருந்தது.
இதனால், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் அவதியடைந்தனா். மேலும், மும்முனை மின்சார பாதை அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, குருக்கத்தி மின் பாதை மும்முனை மின் பாதையாக மாற்றப்பட்டது. இதனை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கே.கருணாகரன், செயற்பொறியாளா் விமலாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.