செய்திகள் :

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

post image

வடக்கு ஒடிசாவின் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 170-க்ம் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலசோர், பத்ராக் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் உள்ள 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மூழ்கின. வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த சில நாள்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

பாலிபால், போக்ராய் மற்றும் ஜலேஸ்வர் ஆகிய மூன்று தொகுதிகளின் கீழ் உள்ள 130 கிராமங்கள் சுபர்ணரேகா நதியின் நீரால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, ஜாஜ்பூரில் சுமார் 45 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பத்ராக் மாவட்டத்தின் தாம்நகர் மற்றும் பண்டாரிபோகாரி தொகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பைதரணி ஆற்றின் துணை நதியான கனி ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஜாஜ்பூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜாஜ்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறினார், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பலர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குச் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்கப்பட்டு வருகிறது.

சஹாஜ்பஹால் பகுதியில் சஃபி ஆற்றில் உள்ள பாலத்தைக் கடக்கும்போது லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநர் சுஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளார், தீயணைப்பு வீரர்கள் லாரியின் உதவியாளரை மீட்டனர். காணாமல் போன ஓட்டுநரைத் தேடும் பணி நடந்து வருகிறது. ராஜ்காட்டில் உள்ள சுபர்ணரேகா நதியின் நீர்மட்டமும், பைதரணியின் நீர்மட்டமும் அபாய அளவைவிட அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவில் இன்று 5.30 மணிக்கு ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், அது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த இரண்டு நாள்களில் வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் நான்கு நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்யும். ஆகஸ்ட் 26-27 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கஜபதி, ராயகடா, நாயகர் மற்றும் கந்தமால் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையையும் வானிலை மையம் வெளியிட்டது.

More than 170 villages in Balasore, Bhadrak and Jajpur districts of North Odisha were under flood water for the second consecutive day on Tuesday, even as the IMD has warned of heavy rainfall in the next few days due to fresh low pressure area in the Bay of Bengal, officials said.

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கவேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, சிஆர்பிஎஃப் உதவி துணை-ஆய்வாளர் மோதி ராம் ஜத் உடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எ... மேலும் பார்க்க

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேச... மேலும் பார்க்க

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பிகாரில் பத்தாவது நாளாக நடைபெறும் வாக்குரிமைப் பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்ப... மேலும் பார்க்க

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

திருவிழாக்கள், பண்டிகை நாள்களையொட்டி பயணம் மேற்கொள்ள, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடுமையான சவாலானதாக மாறிவிட்டிருப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏழை, எளிய மக்கள், கர்ப்பிணிகள், ... மேலும் பார்க்க

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில, 26 வயதே ஆன நிக்கி பாட்டி, வரதட்சிணைக்காக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தல் திடீர் திருப்பமாக கணவர் விபின் பாட்டி மீது ஏற்கனவே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்ப... மேலும் பார்க்க