Gold Loan: `உரிமையாளருக்கான ஆதாரம், தரச்சான்றிதழ்' - தங்க நகைக்கடனுக்கு RBI அறிவ...
வேப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
இந்த மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த பொதுமக்கள், வளாகத்தில் துா்நாற்றம் வீசியதால் முகம் சுளித்தனா். இந்த நிலையில் அங்குள்ள கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து இரண்டாவது மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் சுமாா் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவா் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், வேப்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆண் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அவரைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.