செய்திகள் :

`வேறென்ன வேணும் நீ போதுமே...!' - காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்

post image

`சுந்தரி' தொடரின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் ஜிஷ்ணு மேனன். தற்போது சன் டிவியில் வரவிருக்கும் தொடர் ஒன்றிலும் இவர் நடிக்க இருக்கிறார். ஜிஷ்ணுவுக்கும் செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதிராவுக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஜிஷ்ணு கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி கேரளாவில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது.

ஜிஷ்ணு - அபியாதிரா

சின்னத்திரை நடிகர்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பவர் அபியாதிரா. மேக்கப் தொடர்பான வகுப்புகளையும் இவர் எடுத்து வருகிறார். இவரும் ஜிஷ்ணுவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. 

நண்பர்களாக பயணித்தவர்கள்..!

நண்பர்களாக பயணித்தவர்கள் தற்போது கணவன் - மனைவியாக தங்களது புது வாழ்க்கையை தொடங்கவிருக்கிறார்கள். பாசிட்டிவ், நெகட்டிவ் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு பெர்ஃபார்ம் பண்ணக் கூடியவர் ஜிஷ்ணு. விரைவிலேயே வரவிருக்கும் புதிய தொடரில் இவருடன் நடிகை ரேஷ்மா மதன் நடிக்க இருக்கிறார்.

`சுந்தரி' தொடரில் இவருடன் நடித்திருந்த நடிகர்கள் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். 

ஜிஷ்ணு - அபியாதிரா

வாழ்த்துகள் ஜிஷ்ணு - அபியாதிரா! 

பிரஜின்-சாண்ட்ரா: ரசிகைகள் கொண்டாடிய ஆங்கர்; டிவியின் முதல் Cute Couple |இப்ப என்ன பண்றாங்க? பகுதி 9

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள்.‘இப்... மேலும் பார்க்க

Thudarum: ``மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" - நடிகை, தயாரிப்பாளர் சிப்பி ரஞ்சித் பேட்டி

'துடரும்’ படம் வெற்றி பெறும்னு தெரியும். ஆனால், இந்தளவுக்கு ஒரு மாபெரும் வெற்றி அடையும்னு எதிர்பார்க்கல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும், தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறாங்க!” - என உற்சாகத்தோடு பேச... மேலும் பார்க்க

"அழகர், புத்தர், எடப்பாடி பழனிசாமி, என் மகள்!" - அப்பா ஆன சந்தோஷத்தில் நாஞ்சில் விஜயன்

'கலக்கப் போவது யாரு','அது இது எது' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் மாதம் இவருக்கும் மரியா என்பவர... மேலும் பார்க்க

செய்தி வாசிப்புக்கு முன்னும் பின்னும்; இவ்ளோ செய்துள்ளாரா பாத்திமா பாபு? |இப்ப என்ன பண்றாங்க பகுதி 8

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘... மேலும் பார்க்க

Sundari Akka: "தள்ளுவண்டி டு குக் வித் கோமாளி போட்டியாளர்"- சுந்தரி அக்கா களமிறங்கிய பின்னணி இதுதான்

‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது... சிறகை விரித்துப் பறப்போம்...’ என்று சினிமாவில் முன்னேறுவதைப்போல நிஜவாழ்க்கையில் ஜெயித்துக்காட்டிய சுந்தரி அக்கா, தற்போது நட்சத்திரமாகவே ஜொலிக்க ஆரம்பித்... மேலும் பார்க்க

`பெண் குழந்தை என்பதில் பெரும் உற்சாகம்' - அம்மா ஆனார் 'நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா

'நாதஸ்வரம்' தொடர் மூலம் டிவியில் ரொம்பவே பிரபலமானவர் ஶ்ரீத்திகா.சீரியலில் நடித்துக் கொண்டே சினிமாவுக்கும் முயற்சி செய்து வருகிற இவர், சீரியல்கள் தாண்டி ஒருசிலபடங்களிலும் தலை காட்டியுள்ளார். சில ஆண்டுக... மேலும் பார்க்க