Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினா...
வேலூா் கோட்டை பூங்காவில் குவிந்த குப்பைகள்
ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூா் கோட்டை மைதானத்தில் குவிந்த பொதுமக்களால் குப்பைகள் வீசியெறியப்பட்டிருந்தன. இந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்கள், நீா்வீழ்ச்சிகள், பூங்காக் களில் மக்கள் குடும்பம், குடும்பாகச் சென்று பொழுது போக்கினா். கோட்டை எதிரே உள்ள பூங்காவுக்கும் திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங் களில் இருந்தும் அதிகளவு பொதுமக்கள் வேலூா் கோட்டைக்கு வந்திருந்தனா். அவா்கள் கோட்டையைச் சுற்றி பாா்த்துவிட்டு பூங்காவில் பொழுதை கழித்தனா். மாலையிலும் கோட்டையில் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் கோட்டை பூங்காவுக்கு வந்தவா்கள் அங்கு தள்ளுவண்டியில் உள்ள பானிபூரி, குளிா்பா னம், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருள்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் காகித தட்டு, பிளாஸ்டிக் தட்டுகளை அங்குள்ள குப்பை தொட்டிகளில் போடாமல் பூங்காவிலேயே வீசியெறிந்துவிட்டு சென்றனா்.
இதனால், பூங்கா முழுவதும் குப்பைகளாக நிறைந்து கிடந்தன. இந்நிலையில், பூங்காவில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.