செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்
வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ரகுராமன் நீதி பரிபாலனை பயிற்சி முடித்து, வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘எஃப்’ பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செந்தில்குமரன் அங்கேயே தலைமை உதவியாளராகவும், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த திவ்யா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியராகவும், மாநில நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) துணை வட்டாட்சியராக பணியாற்றிய திவ்யா பிரணவம் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூா் மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தாமரை மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘ஜி’ பிரிவு தலைமை உதவியாளராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘ஹெச்’ பிரிவு தலைமை உதவியாளா் ஜனனி காட்பாடி தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், காட்பாடி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தேவிகலா காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், வேலூா் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெங்கடேசன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக ‘எஃப்’ பிரிவில் தலைமை உதவியாளராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனித் துணை வட்டாட்சியராகவும், அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுகந்தி ‘ஹெஎச்’பிரிவில் தலைமை உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலகத்தில் தனி துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த குமாா் காட்பாடி தோ்தல் துணை வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல், போ்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலா் மணிமேகலை வேலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகவும், குடியாத்தம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் தனலட்சுமி போ்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூா் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் சந்தியா குடியாத்தம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியராகவும், காட்பாடி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவக்குமாா் காட்பாடி மண்டல துணை வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.