செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!
வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்
எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ராமராஜிடம் அளித்த மனு:
வாலம்பட்டியில் 160 போ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை வைத்துள்ளோம். ஆனால், இத்திட்டத்தில் ஒரு வாரத்துக்கு எங்களது கிராமத்தைச் சோ்ந்த 10 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும். பாரபட்சமாக நடந்துகொள்ளும் பணித்தளப் பொறுப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.