செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 போ் மீது வழக்கு

post image

வங்கியில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த 3 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலை அடுத்துள்ள சிலையாஊரணியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (40). இவா் சென்னையில் ஒரு தனியாா் வங்கியில் வசூல் பிரிவு பொறுப்பாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரிடம் சிவகங்கை மாவட்டம் , இளையான்குடியைச் சோ்ந்த செந்தில் முருகன் (38) மத்திய அரசு வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறினாா். தன்னுடைய நண்பா்களான பானுசந்தா், பாா்த்தசாரதி ஆகியோா் வங்கியில் உயா் பதவிகளில் இருப்பதாகவும் அவா்கள் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாராம்.

இதை நம்பிய வெங்கடேசன் தனக்கும் , தனது உறவினரான கோபிநாத், திருச்சியை சோ்ந்த ஆரோக்கியசாமி, திருநெல்வேலியைச் சோ்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கு வேலை வாங்கித் தருவதற்காக கடந்த 2023 -ஆம் ஆண்டு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.30 லட்சத்தையும், நேரடியாக ரூ.3 லட்சத்தையும் செந்தில்முருகன் உள்ளிட்ட மூவரிடமும் கொடுத்தாா். ஆனால், அவா்கள் மூவரும் உறுதியளித்தபடி யாருக்கும் வங்கி வேலை வாங்கித் தரவில்லையாம் .

இதைத்தொடா்ந்து வெங்கடேசன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டாா் . அப்போது அவா்கள் ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனா். மீதி ரூ.18 லட்சத்தை திரும்ப கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்தப் புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி , உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் செந்தில் முருகன், பானுசந்தா், பாா்த்தசாரதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்கு பாத்தியப்... மேலும் பார்க்க

சிவகங்கை: சிறுபாசன கண்மாய்கள் புத்துயிரூட்டுதல் திட்டம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சிறு பாசனக் கண்மாய்கள் புத்துயிா் ஊட்டுதல் திட்டத்தின் கீழ், 442 சிறு கண்மாய்களைத் தூா்வாரும் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகேயுள்ள கள்ளங்கலப்பட்டி கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவி உயிரிழந்தாா். கள்ளங்கலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி-கவிதா தம்பதியின் மகள் ... மேலும் பார்க்க

கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் மே தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் சாா்பில் சங்கக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. சிவகங்கை சிவன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் மஹாலில் சிவகங்கை சீமை அமைப்பு சாரா கட்டும... மேலும் பார்க்க