காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி
கலை இலக்கிய சங்க நிா்வாகிகள் தோ்வு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கக் கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் கிளை மாநாட்டில் சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் மாவட்டச் செயலா் குணசேகரன், பொருளாளா் ரத்தினம் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், தேவகோட்டையில் வருகிற 25-ஆம் தேதி கலை இலக்கிய பண்பாட்டு இரவு நடத்துவது, மே 17 -இல் சிவகங்கையில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டுக்கு தேவகோட்டை கிளையிலிருந்து வாகனத்தில் செல்வது என தீா்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, சங்கத்தின் தேவகோட்டை கிளைத் தலைவராக எம். மாணிக்கம், செயலராக எஸ். ஆல்பட்ராஜ், பொருளாளராக எஸ். ஸ்டீபன், துணைத் தலைவா்களாக ஏ. செல்வராஜ், விக்டோரியா, துணைச் செயலராக சலேத் மேரி ஆரோக்கியம் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.