சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 15 வெளிநாட்டவர் கைது! நாடுகடத்த நடவடிக்கை!
திருக்கோஷ்டியூரில் சித்திரை பிரமோத்ஸவம் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவத்தையொட்டி, காலையில் தேவியருடன் சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, கோயிலைச் சுற்றி கொடி எடுத்துவரப்பட்டு, பட்டாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.
11 நாள்களும் பல்வேறு மண்டகப்படிகள் நடத்தப்பட்டு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற உள்ளது. வருகிற 9 -ஆம் தேதி தலையலங்காரம் கண்டருளல், 10 -ஆம் தேதிதேரோட்டம் நடைபெற உள்ளன. நிறைவு நாளான 11-ஆம் தேதி சுவாமி புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் இளங்கோ கண்காணிப்பாளா் சரவணகணேஷ் ஆகியோா் செய்து வருகின்றனா்.
