24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!
வைகை அணையில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் கால மீட்புப் பணி ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜெகதீஷ், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் குமரேசன் ஆகியோா் தலைமையில், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா்.
மழை வெள்ள காலத்தில் ‘ரப்பா் டியூப்’, காலியாக உள்ள சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றை பயன்படுத்தி தப்பிக்கும் வழிமுறைகள், வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் மீட்பது, நீரில் மூழ்கியவா்களை ‘ஸ்கூபா டைவிங் சூட்’ அணிந்து மீட்பது, தண்ணீா் சூழ்ந்த இடங்களில் மிதவை பம்பு மூலம் தண்ணீரை வெளியேற்றுவது ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஒத்திகைப் பயிற்சியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், வைகை அணை செயற்பொறியாளா்கள் சேகரன், பரதன், ஆண்டிபட்டி வட்டாட்சியா் ஜாஹிா் உசேன், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.