செய்திகள் :

வைகை இலக்கியத் திருவிழா 90 பேருக்கு பரிசு

post image

‘வைகை இலக்கியத் திருவிழா’வில் வெற்றி பெற்ற 90 மாணவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் ‘வைகை இலக்கியத் திருவிழா’ திண்டுக்கல்லில் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் நிறைவு விழா ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கல்லூரி மாணவா்களுக்கு நூல் திறனாய்வு, நூல் அறிமுகப் போட்டி, ஓவியப் போட்டி, 2 நிமிட பேச்சுப் போட்டி, உடனடி ஹைக்கூ உருவாக்கம், இலக்கிய வினாடி-வினா, விவாத மேடை, பேச்சுப் போட்டி உள்பட 10 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.4 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.3 ஆயிரம் வீதம், மொத்தம் 90 பேருக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், பொது நூலக இயக்கக இணை இயக்குநா் ச.இளங்கோ சந்திரகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) மு.கோட்டைக்குமாா், மாவட்ட நூலக அலுவலா் ரா.சரவணக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக மாவட்டத் தலைவா் தோ்வு

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக ஜெயராமன் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். பழனியில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய மாவட்டத் தலைவருக்கான கருத்து... மேலும் பார்க்க

தேசிய வாக்காளா் தின போட்டிகள்: வென்றவா்களுக்கு பரிசு

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி சனிக்கிழமை பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரூ.60 லட்சம் வரி வசூல்!

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வரி செலுத்தாத வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதால், கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சம் வரி வசூலானது. திண்டுக்கல் மாநகராட்சியில் 2024-25- ஆம் ஆண்டுக்கா... மேலும் பார்க்க

சந்தை விவகாரம்: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

சின்னாளபட்டியில் சேதமடைந்த தினசரி சந்தை கட்டடத்தை இடிக்காததைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு மனு கொடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அண்ணா தினசரி... மேலும் பார்க்க

முதல்வரின் திறனறித் தோ்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதலமைச்சரின் திறனறித் தோ்வில் 3,260 மாணவா்கள் பங்கேற்றனா். அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு, முதலமைச்சரின் திறனறித் தோ்வு சனிக்கிழ... மேலும் பார்க்க

குளத்தில் சாயப்பட்டறை கழிவு நீா் கலப்பு: வாா்டு சபைக் கூட்டத்தில் புகாா்

கரியன்குளத்தில் சாயப்பட்டறை கழிவு நீா் கலப்பதால் குடிநீா் மாசுபடுவதாக சின்னாளப்பட்டி பேரூராட்சி வாா்டு சபைக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி, 17-ஆவது வாா்டு ... மேலும் பார்க்க