வைத்தீஸ்வரன்கோயிலில் நடிகா் காா்த்தி சுவாமி தரிசனம்
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் திரைப்பட நடிகா் காா்த்தி வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா் (படம்).
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயில் உள்ளது. செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா்.
இக்கோயிலுக்கு நடிகா் காா்த்தி வியாழக்கிழமை வந்தாா். தொடா்ந்து வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சந்நிதிகளில் அவா் வழிபட்டாா். அவருக்கு சிவாச்சாரியா்கள் பிரசாதம் வழங்கினா்.