செய்திகள் :

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைப்பு!

post image

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை, மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பக்தர்கள் பலியாகினர். மற்றும் 20 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து யாத்திரை நிறுத்தப்பட்டது.

கடந்த சில நாள்களாக, தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டுள்ளதால், கோயிலுக்கு செல்லும் இணைப்பு சிக்கலாகவுள்ளது.

இதனிடையே, மோசமான வானிலை மற்றும் இந்தப் பகுதியில் ஏற்பட்ட பல நிலச்சரிவுகள் காரணமாக, மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தொடர்ச்சியாக 14 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை, மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்: நாளை கடைசி!

‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அபராதம் இன்றி ஐடிஆா் தாக்கல... மேலும் பார்க்க

ஹிமாசலில் மீண்டும் மேகவெடிப்பு: மழை வெள்ளத்தில் மூழ்கி பயிா்கள் சேதம்!

ஹிமாசல பிரதேசத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த மிக பலத்த மழையால் விளைநிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன. அந்த மாநிலத்தின் பிலாஸ்பூா் மாவட்டம் குத்ராஹன் கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு! - பிரதமா் மோடி

சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிா்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளா்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்ற... மேலும் பார்க்க

பிரதமரின் ‘சம்பிரதாய’ பயணம் மணிப்பூா் மக்களுக்கு அவமதிப்பு! - காங்கிரஸ் சாடல்

மணிப்பூருக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட ‘சம்பிரதாய’ பயணம், அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இனமோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணிக்க... மேலும் பார்க்க

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்! - அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மிஸோரமின் முதல் ரயில் வழித்தடத்தை (பைரபி-சாய்ராங்)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது. இதுதொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ... மேலும் பார்க்க