செய்திகள் :

ஷாகித் கபூர், பூஜா ஹெக்டேவின் தேவா பட டிரைலர்!

post image

நடிகர் ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே நடித்துள்ள தேவா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிவரும் தேவா படம் 2025ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படம் வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பூஜா ஹெக்டே விஜய்யின் 69 படத்தில் நடித்துள்ளார். சூர்யா 44 படத்திலும் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். 

அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.

1 மணிக்கு வெளியாக வேண்டிய டிரைலர் சற்று தாமதமாக வெளியாகியுள்ளது.

சாத்விக்/சிராக் இணை முன்னேற்றம்: சிந்து, கிரண் தோல்வி

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் உள்நாட்டு நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை, அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, கிரண் ... மேலும் பார்க்க

மெஸ்ஸி மீது எம்பாப்பே பொறாமைப்பட்டார்: நெய்மர்

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி மீது ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே பொறாமையில் இருந்ததாக கால்பந்தாட்ட வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரர் ர... மேலும் பார்க்க

அஜித் பங்கேற்கும் அடுத்த ரேஸ் - இந்த முறை போர்ச்சுகலில்!

நடிகர் அஜித் குமார் போர்ச்சுகலில் நடைபெற இருக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் நாளை கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து ’அஜித்... மேலும் பார்க்க

வரலாற்று சாதனை..! 2034 வரை விளையாட ஒப்பந்தமான கால்பந்து வீரர்!

பிரபல கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 2034 வரை விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் எர்லிங் ஹாலண்டுக்கு ஒரு வாரத்துக்கு 5 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4.33... மேலும் பார்க்க

மாமன் பட முதல் பார்வை போஸ்டர்..! வெளியீட்டு மாதமும் அறிவிப்பு!

சூரி நாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியரா... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் ககன மார்கன் - முதல் பாடல் வெளியீடு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடித்துள்... மேலும் பார்க்க