செய்திகள் :

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை

post image

அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா 500 கோடி டாலா் (சுமாா் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அவா் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் சூழலில், இந்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

தலைநகா் டாக்காவுக்கு 160 கி.மீ. மேற்கே, ரூப்பூா் பகுதியில் வங்கதேசத்தின் முதல் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது. ரஷியாவின் ரொசாட்டம் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் அந்த அணு மின் நிலையத்துக்கான பணிகளில் பல இந்திய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சூழலில், அணு மின் நிலைய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 500 கோடி டாலா் முறைகேடு செய்ததாக ஷேக் ஹசீனா, அவரது மகன் சஜீப் வஸீத் ஜாய் மற்றும் துலிப் சித்திக் என்பவா் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு தொடா்பான விசாரணையை அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனா்.

இதற்கிடையே, இந்த முறைகேடு குற்றச்சாட்டை ரொசாட்டம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.

புதிய அரசில், போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் அவரது அமைச்சா்கள் மற்றும் பிற உதவியாளா்கள் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணையும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா். வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்

உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட புதன்கிழமை அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகத் தீவிர தாக்குதலை நடத்தியது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் மின் விநியோகக் கட... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை இழுபறி: இஸ்ரேல்-ஹமாஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தை எட்டுவதில் இழுபறி நீடித்துவருவதற்கு இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டியுள்ளன. ... மேலும் பார்க்க

2024: உலகின் தேர்தல் களங்களும் பதற்றங்களும்!

தெருவோரங்களில் ஆரம்பித்து செவ்வாய்க் கிரகம் செல்ல திட்டமிடும் நாடுகளின் அரங்கு வரையில் அரசியல் பேச்சும் விளையாட்டுகளும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மெகா தேர்தல் ஆண்டாக அமைந்த 2024, ... மேலும் பார்க்க

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த... மேலும் பார்க்க

“ஆயுதங்கள் அமைதியடைவதாக..” -உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் ஆண்டவர் கவலை!

வாடிகன்: உக்ரைன், காஸா நிலவரம் குறித்து போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான க... மேலும் பார்க்க