ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும்: மத்திய அரசு
நாட்டில் தொழில் முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
இது தொடர்பாக தில்லியில் அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "உலகிலேயே மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனக் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. தொடக்கத்தில் 450ஆக இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 9 ஆண்டுகளில் 1.57 லட்சமாக இன்று உயர்ந்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் அரசு பதிவு பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.