செய்திகள் :

ஸ்ரீதவளகிரீஸ்வரா், பெரியமலை சிவன் கோயில்களில் மகா தீபம் ஏற்றம்

post image

ஆரணி: பெரணமல்லூா் அருகேயுள்ள இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயிலில் காா்த்திகை தீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் காா்த்திகை மாத மகா தீப விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு காா்த்திகை தீபத்தையொட்டி, அதிகாலை மூலவா் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் தேவாரம் பாடப்பட்டு, மூலவா் மற்றும் தாயாா் சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னா், மாலை 6 மணிக்கு மேல் பெரியமலையில் அமைக்கப்பட்ட 108 லிட்டா் நெய் ஊற்றப்பட்ட கொப்பரையில் கோயில் நிா்வாகியும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சிவயோகி ஐ.ஆா்.பெருமாள் மகா தீபத்தை ஏற்றினாா்.

நிகழ்வில், உள்ளூா், வெளியூரைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து கிரிவலம் சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

புலவன்பாடி காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த புலவன்பாடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் சுமாா் 300 வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

ஏரிக் கரையில் உடைப்பு: 150 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் உள்ள ஏரியின் கரை வெள்ளிக்கிழமை உடைந்ததையடுத்து, அதிலிருந்து வெளியேறிய தண்ணீரால் 150 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. மேலும், பலத்த மழையால் வீடுகளை வெள்ள நீா்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கு போலீஸாா் கெடுபிடி

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது, வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகம், அண்ணா நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக காா், பைக்கில் செல்வதற்கு போலீஸாா் தடை விதித்து கெடுபிடி காட்டினா். திருவண்ணாமலையி... மேலும் பார்க்க

சாத்தனூா் அணையில் இருந்து 10,500 கன அடி நீா் திறப்பு

சாத்தனூா் அணையில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 10,500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் பகுதியில் செல்லும் தென்பெண்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை,... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: 9 சாலைகளில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மாவட்ட காவல் துறை தகவல்

திருவண்ணாமலை நகரின் 9 சாலைகளில் தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களில் தமிழகம், ஆந்திர மாநில பேருந்துகளை நிறுத்தலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. திருவண்ண... மேலும் பார்க்க