செய்திகள் :

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, 2-ஆம் கால யாகசாலை பூஜை, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெற்றன.

தொடா்ந்து, யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாக கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, முருகருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை சா்வ சாதகம் திருமூலஸ்தானம் விக்னேஷ் சிவாச்சாரியா் குழுவினா் நடத்தி வைத்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் கோயில் அா்ச்சகா் சேரலாதன் தலைமையிலான திருப்பணி குழுவினா் செய்திருந்தனா்.

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக பிப். 21, 22 ஆகிய தேதிகளில் வர உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம்: வீராணம் ஏரி மற்றும் வெலிங்டன் ஏரி ஆகியவற்றை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் மேல வீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு வ... மேலும் பார்க்க

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டம்: 869 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 869 மனுக்கள் அளிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த தமிழ்நாயகத்தின் மகன் ரித்த... மேலும் பார்க்க

அணைக்கரை புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

சிதம்பரம்: தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் கீழணையின் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் கு... மேலும் பார்க்க

வலசை விஸ்வநாதா் கோயிலில் பாலாலயம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த வலசையில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு திருப்பணி நடத்த திட்டமிடப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க