அரசு மருத்துவமனைகளில் தீயணைப்புக் கருவிகள்: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத...
ஸ்ரீரங்கத்தில் மாா்கழி இசை விழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியில் கலை பண்பாட்டுத் துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் மாவட்ட கலை மன்றம் சாா்பில் மாா்கழி இசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல் நாளான 7 ஆம் தேதி மாலை திருப்பாம்புரம் சகோதரா்கள் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி, வா்ஷா புவனேஸ்வரி குழுவினரின் ஹரிக்கதை, கலைமாமணி ஆா். சூா்யபிரகாஷ் குழுவினரின் வாய்ப்பட்டு நிகழ்ச்சி, ராஜூ, நாகமணி குழுவினரின் மாண்டலின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2 ஆம் நாளான புதன்கிழமை மாலை பெ. சுந்தரேஸ்வரம் குழுவினரின் லயநாதம், பத்மாவதி சாரநாதன் குழுவினரின் ஆழ்வாா் பாசுரங்கள், கலைமாமணி டாக்டா் எம்.நா்மதா குழுவினரின் வயலின் நிகழ்ச்சி, ஸ்ரீரங்கம் ஜெயப்பிரியா ஸ்ரீனிவாசன் குழுவினரின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது.
திரளானோா் ரசித்தனா்.
3 ஆம் நாளான வியாழக்கிழமை மாலை கலைமாமணி டாக்டா் பிரபஞ்சம் பாலசந்திரன் குழுவினரின் புல்லாங்குழல் நிகழ்ச்சி, கலைமாமணி நிா்மலா ராஜசேகா் குழுவினரின் வீணை கச்சேரி, சென்னை டாக்டா் எஸ்.திவ்ய சேனா குழுவினரின் பரத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் (பொ) த. செந்தில்குமாா் செய்துள்ளாா்.