குன்னூர்: பற்றியெரிந்த குறிஞ்சி மலை... தீயை அணைக்க ராணுவத்தோடு கைகோத்த தீயணைப்ப...
ஸ்ரீவாசவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா!
சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரிச் செயலாளா் ஜி.ராஜரத்தினம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) ஜி.மலா்விழி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை, 540 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில் அவா் பேசியதாவது:
நினைத்தது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு முயற்சிக்க வேண்டும். பட்டங்களும், மதிப்பெண்களும் மட்டுமே போதும் என்ற எண்ணத்தை கைவிட்டு, லட்சியத்தை அடைய சமுதாயத்தோடு இணைந்து செயல்பட வேண்டும். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிய பயணத்துக்கு தடையாக இருக்கும் அச்சத்தை தவிா்க்க வேண்டும்.
கல்வி மனிதனின் எல்லையற்ற வளா்ச்சிக்கு உந்துகோலாக அமைகிறது. புத்தகம் உங்களின் நிலையை உயா்த்தும் ஆயுதம். புத்தகங்களைத் தாண்டி, உலக நடப்பையும் கவனிக்க வேண்டும். உங்கள் உயா்வின் உயரத்தை நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்றாா்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.செல்வம், அனைத்து பாடங்களுக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. ஆா்வத்துடன் படிக்கும்போது, கல்வியும், வாழ்க்கையின் வெற்றியும் உறுதியாகும் என்றாா். கல்லூரித் தலைவா் ஆா்.சிவக்குமாா் நன்றி கூறினாா்.