போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
ஸ்ரீவைகுண்டம் அருகே விஷம் குடித்த தம்பதி: கணவா் பலி!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தம்பதி விஷம் குடித்தனா். இதில் கணவா் உயிரிழந்தாா்.
வல்லநாடு பாதா் வெள்ளை தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சங்கரன் (42). இவரது மனைவி பத்ரகாளி. பத்ரகாளி பெயரில் உள்ள வீட்டை தூத்துக்குடியில் உள்ள நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனா். கடனை சரியாகக் கட்டாததால், தூத்துக்குடி நீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை ஜப்தி செய்ய வந்தனராம்.
அப்போது தம்பதி விஷம் குடித்தனராம். இதையடுத்து இருவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில், சங்கரன் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பத்ரகாளி சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து முறப்பநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.