இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
கடந்த 1991-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்தாா். இதையடுத்து அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
அங்கு புதன்கிழமை நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ் குமாா், முன்னாள் எம்.பி. எஸ். திருநாவுக்கரசா், நாடாளுமன்ற உறுப்பினா் ராபா்ட் புரூஸ், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன், புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனா்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சாா்பில் மாவட்டத் தலைவா் முருகன் சாந்தகுமாா் தலைமையில் ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு பகுதியில் இருந்து ராஜீவ் காந்தி நினைவிடம் வரை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.