செய்திகள் :

ஹமாஸின் மூத்த தலைவர் பலி; 6 நாள்களில் 600 பேர் உயிரிழப்பு - மீண்டும் தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்!

post image

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்ய ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தையால் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்டியது இஸ்ரேல் - காசா போர்.

இந்த மாதம், அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்க இருந்த சமயத்தில், சமீபத்தில் போர் நிறுத்தத்தை பின்பற்றாமல் காசா மீது தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.

`பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவில்லை' என்பதைக் காரணமாக கூறியது இஸ்ரேல். இதனால், கடந்த ஆறு நாள்களாக தொடர்ந்து வருகிறது காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல்.

இஸ்ரேல் - காசா போர்

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் முக்கிய தலைவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவியது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் மூத்த தலைவர் சலா அல்-பர்தாவில். இன்று அதிகாலையில் காசாவின் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டுமல்லாமல், இந்தத் தாக்குதலில் இவரது மனைவி மற்றும் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை முதல், இஸ்ரேலால் கிட்டதட்ட 600 பாலஸ்தினீயர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, பதிலடி கொடுக்க ஹமாஸ் தொடங்கினால், மீண்டும் இஸ்ரேல் - காசா போர் உச்சமடையும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: 18 வயது பெண்ணுக்கு நரைமுடி வருவதை தடுக்க முடியுமா? இளநரை பிரச்னைக்கு தீர்வு என்ன?

Doctor Vikatan: என்மகளுக்கு18 வயதுதான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு தலையில் நிறைய வெள்ளைமுடிகள் இருக்கின்றன. இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் மொத்த தலையும் நரைத்துவிடுமோ என பயமாக உள்ளது. இதைத... மேலும் பார்க்க

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க