செய்திகள் :

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

post image

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா மாநில காவல்துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு எதிராக ஹரியாணாவின் அசோகா தனியாா் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியா் அலி கான் முகமது என்பவர் கருத்து பதிவிட்டு வந்தார்.

இது தொடா்பாக பாஜக இளைஞரணி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான பேராசிரியரை தில்லியில் வைத்து ஹரியாணா போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பேராசிரியரின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மீறும் வகையில் இருப்பதால், ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பேராசிரியர் கைது செய்யப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க ஹரியாணா மாநில காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பேராசிரியர் அலி கானுக்கு புதன்கிழமை காலை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஐஜி அந்தஸ்து அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணா பேராசிரியருக்கு ஜாமீன்!

ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

நமது நிருபர்தேசிய கல்விக் கொள்கை (என்இபி- 2020) மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தாததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (எஸ்எஸ்எஸ்) கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறு... மேலும் பார்க்க

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு: கா்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடா்புள்ள இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்குடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வராவுக்கு தொடா்புள்ள கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை மேற்கொண்டது. துபை... மேலும் பார்க்க

ஆந்திரம்: ரேஷன் பொருள் நேரடி விநியோகம் ஜூன் 1 முதல் ரத்து

ஆந்திரத்தில் வீடுதோறும் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படும் நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.மனோகா் புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு- முதல் எம்.பி.க்கள் குழு ஜப்பான் பயணம்

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சோ்... மேலும் பார்க்க

பிகாரில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை: காங்கிரஸ் வாக்குறுதி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள ‘மகா கட்பந்தன்’ கூட்டணி வெற்றி பெற்றால் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அகில இந்திய மகளிா் காங... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடை... மேலும் பார்க்க