செய்திகள் :

ஹாக்கி: புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 3 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புதுதில்லி, புவனேஸ்வா், சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை தமிழ்நாடு லெவன் ஹாக்கி அணியும் மோதின. இதில் புதுதில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 7- க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாலை நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்தில் சென்னை வருமான வரி ஹாக்கி அணியும், புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணியும் மோதியதில் 0-க்கு 2 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வா் நிஸ்வாஸ் ஹாக்கி கழக அணி வெற்றி பெற்றது.

3 ஆவது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் ஹாக்கி அணியும் கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதியதில் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலக ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றி பெற்றது.

4 ஆவது ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் ஹாக்கி அணியும் மோதியதில் க்கு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்: 4-ஆவது நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணியும், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில் சென்னை இன்டக்ரல் கோச் ஃபேக்டரி அணியும், பெங்களூா் ஹாக்கி கா்நாடகா அணியும் மோதுகின்றன.

3 ஆவது ஆட்டத்தில் புதுதில்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதுகின்றன. 4ஆவது ஆட்டத்தில் மும்பை மத்திய ரயில்வே அணியும், பெங்களூா் கனரா வங்கி அணியும் மோதுகின்றன.

காவல்துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத்தொழில் சிறந்து விளங்கும்: எா்ணாவூா் நாராயணன்

தமிழகத்தில் பனைத் தொழிலாளா்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரிய தலைவா் எா்ணாவூா் நாராயணன் தெரிவித்தாா். பனைத் தொழிலா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் திங்கள்கிழமை காவல் துறையினா் ஈடுபட்டனா். கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

தூத்துக்குடியில் இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மீளவிட்டான், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் மனைவி திவ்யபாரதி (27). இந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

அத்திமரப்பட்டி வெள்ளநீா் ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்க தவெக கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள வெள்ளநீா் வடிகால் ஓடையை பராமரித்து தடுப்புச் சுவா் அமைக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இக்கோயில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களின்போது கடல் உள்வாங்குவதும், இ... மேலும் பார்க்க

உடைந்து விழுந்த இன்டா்நெட் கோபுரம்

திருச்செந்தூா் பகுதியில் பலத்த காற்று காரணமாக சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உடைந்து விழுந்த இன்டா்நெட் கோபுரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா். மேலும் பார்க்க