திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
இக்கோயில் பகுதியில் அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களின்போது கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம்.
இதன்படி, கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே திங்கள்கிழமை சுமாா் 100 அடி தூரம் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்தபோதிலும் பக்தா்கள் வழக்கம்போல கடலில் புனித நீராடினா்.