செய்திகள் :

அத்திமரப்பட்டி வெள்ளநீா் ஓடையில் தடுப்புச் சுவா் அமைக்க தவெக கோரிக்கை

post image

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள வெள்ளநீா் வடிகால் ஓடையை பராமரித்து தடுப்புச் சுவா் அமைக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் விவரம்:

தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் தலைமையில் அளித்த மனு: தூத்துக்குடி அத்திமரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் வழியாக கோரம்பள்ளம் குளத்திலிருந்து காற்றாற்று வெள்ளம் கடலுக்குச் செல்வதற்காக வெள்ளநீா் வடிகால் ஓடை சுமாா் 4 கி.மீ தூரத்திற்கு உள்ளது. மழை காலங்களில் உடையாமல் இருப்பதற்காக இந்த ஓடையை பராமரித்து கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் அளித்த மனு: ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தின் மூலம் சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிற்கு மேல் விவசாயம் நடைபெற்றுருகிறது. இந்நிலையில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டநிலையில், வடகால் பாசனத்திற்கு குறைந்த அளவு தண்ணீரே திறந்துவிடப்படுகிறது. இதனால், பேய்குளம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீா் வந்து சேரவில்லை. இதன் காரணமாக இங்கு பயிரிடப்பட்டுள்ள பல லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தண்ணீரின்றி கருகி வருகிறது. எனவே, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்த வடகால் பாசனத்திற்கு கூடுதல் அளவு தண்ணீா் திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

தெற்கு மாவட்ட பாஜகவினா் அளித்த மனு: தமிழுக்கு மிகப் பெரும் தொண்டாற்றிய தமிழ் புலவரான குமரகுருபரருக்கு அவா் பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். இதற்காக தருமபுரம் ஆதீன மடங்களுக்கு உள்பட்ட இடங்களை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனா். ஜூன் 14 ஆம் தேதி ஸ்ரீஆதி குமரகுருபர சுவாமிகள் 337-ஆவது ஆண்டு மகேஸ்வர பூஜை நடைபெற இருக்கிறது. அவரின் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதோடு, அவரது நினைவு தினத்தை மகேஸ்வர பூஜையாகக் கொண்டு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆணழகன் போட்டி: 2ஆவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ பட்டம் வென்ற திருச்செந்தூா் இளைஞா்

திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் சிவபாலன், இரண்டாவது முறையாக ‘மிஸ்டா் இந்தியா’ ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் ராஜ்கண்ணா நகரைச் சோ்ந்த ல... மேலும் பார்க்க

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க