செய்திகள் :

ஹார்திக் பாண்டியா 100% மரியாதைக்கு தகுதியானவர்..!

post image

ஹார்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார்.

அதைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபியில் ஹார்திக் சிறப்பாக விளையாடி நன்மதிப்பை மீட்டார்.

தற்போது, ஐபிஎல் முதல் போட்டியாக சிஎஸ்கே அணியை சேப்பாக்கில் சந்திக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதல் போட்டியில் ஹார்திக் விளையாடமாட்டார். சூர்யகுமார் கேப்டனாக இருப்பார்.

100 சதவிகிதம் மரியாதைக்கு தகுதியானவர்

இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியதாவது:

கடந்த சீசன் ஹார்திக் பாண்டியாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பாண்டியா ஃபீல்டிங்கிற்கு செல்லும்போது ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு 100 சதவிகிதம் மரியாதைக்கு தகுதியானவர்.

ஒரு கிரிக்கெட்டராக யாருக்கும் அப்படி நடக்கக்கூடாது. ஆனால், அவர் அதை சிறப்பாக கையாண்டார். ஹார்திக் பாண்டியா கடினமான மனிதர்.

அவர் கடினமான சூழ்நிலையில் மின்னும் கிரிக்கெட்டர். காயம், குடும்பப் பிரச்னை, என பல பிரச்னைகளில் இருந்தார். ஆனால், அதையெல்லாம் தாண்டி சாதனகளைப் படைத்தார்.

பாண்டியா தன்னம்பிக்கையானவர் ஹர்பஜன் புகழாரம்

கிரிக்கெட்டில் சிறந்தவர்களாக கடினமான சூழ்நிலைகளை தாண்ட வேண்டும். அவர் அதைச் செய்திருக்கிறார்.

ஹார்திக் ஃபீல்டிங்கின்போது ஐபிஎல் நன்றாக இருக்கிறது. ஐபிஎல் மட்டுமல்ல கிரிக்கெட்டுமே நன்றாக இருக்கிறது.

பாண்டியா மிகவும் தன்னம்பிக்கையான வீரர். மிகவும் நேர்மறையாக சிந்திப்பவர்.

அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உடையவர். அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சிக்ஸர்களை குறிவைக்கும் தோனி: சிஎஸ்கே கேப்டன்

ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்களை குறிவைத்து தோனி ஆடவுள்ளதாகவும், அவரின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் உள்ளதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பா் கிங்ஸ... மேலும் பார்க்க

கோலி, சால்ட் அசத்தல் அரைசதம்: வெற்றியுடன் தொடங்கியது ஆர்சிபி!

கோலி, சால்ட் அசத்தல் அரைசத்தால் ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது பெங்களூரு அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந... மேலும் பார்க்க

அஜிங்க்யா ரஹானே, சுனில் நரைன் அதிரடி; பெங்களூருவுக்கு 175 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22) கோலாகலமாக... மேலும் பார்க்க

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டி: நினைவுப் பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்!

கொல்கத்தா: இந்தியன் ப்ரீமியர் லீக்(ஐபிஎல்) 18-ஆவது கிரிக்கெட் தொடரானது (ஐபிஎல் 2025) இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது.அத... மேலும் பார்க்க

ஐபிஎல் ஆரம்பம்: ஷாருக் கானுடன் நடனமாடிய விராட் கோலி!

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-ஆவது சீசன், ஐபிஎல் 2025, இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது.விழா மேடையேறி அரங்கத்த... மேலும் பார்க்க

கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல்; பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆர்சிபி!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இன்று (மார்ச் 22... மேலும் பார்க்க