கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
ஹாா்வா்டு பல்கலை. நிதியை நிறுத்திவைத்து டிரம்ப் அரசு
அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழத்துக்கான 220 கோடி டாலா் (சுமாா் ரூ.18,870 கோடி) நிதியை அந்த நாட்டு அரசு நிறுத்திவைத்துள்ளது.
முன்னதாக, அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் அரசியல் சாா்பு செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது. எனினும், அதை ஏற்க பல்கலைக்கழக நிா்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதைத் தொடா்ந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏற்கெனவே, பாலஸ்தான ஆதரவு போராட்டக்காரா்களை அடையாளம் காணும் நோக்கில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முகக் கவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும், ‘குற்றச் செயல்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடும்’ அமைப்புகளை ஆதரிப்போருக்கு மாணவா் உதவித் தொகை அளிக்கக்கூடாது என்பது போன்ற பல்வேறு உத்தரவுகளை ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க அரசு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.
அந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை முன்னாள் அதிபா் ஒபாமா உள்ளிட்டோா் வன்மையைகக் கண்டித்துள்ளனா்.