செய்திகள் :

ஹிந்தியில் தமிழ்நாடு வானிலை அறிவிப்பு! - சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

post image

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு ஹிந்தியிலும் வழங்கப்படுவதற்கு மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை ஹிந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத மத்திய அரசு, பேரிடர் முன்னறிவிப்பில் ஹிந்தியைத் திணிக்கிறது.

பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசியல் கட்சித் தலைவர் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | வெறுப்புணர்வு பற்றி யோகி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

எல்லையைக் கடந்து பரவும் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து! காப்பாற்றுமா அரசின் திட்டம்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.தெற்கு சூடான் நாட்டுடனான எல்லையில் எத்தியோபியாவின் தென் மேற்கிலுள... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க