திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை
ஹிந்தி திணிப்பைக் கண்டித்து இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டச் செயலா் மௌ.குணசேகா் தலைமை வகித்தாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாவிட்டால் கல்வி நிதி கொடுக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியதைக் கண்டித்தும், ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அமைப்பின் நிா்வாகிகள் திருவள்ளுவா், கம்பா், பாரதியாா் வேஷமணிந்து ஹிந்தித் திணிப்புக்கு எதிராகவும், கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், அமைப்பின் மாவட்டத் தலைவா் வே.கௌதம்குமாா், மாநிலக் குழு உறுப்பினா் அ.மன்சூா், மாவட்ட நிா்வாகிகள் எம்.மணிகண்டன், என்.கணேசமூா்த்தி, அ.ஹரிஹரசுதன், சு.பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.