செய்திகள் :

ஹீமோபிலியா பாதித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை: சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை

post image

சேலம் அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதன்மையா் தேவி மீனாள் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓமலூா், பண்ணப்பட்டி, மாரகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் சூா்யா (17). இவா் ஹீமோபிலியா என்னும் ரத்தம் உறையாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாா். இவா் கண் சிவந்து வீக்கத்துடன் சேலம் அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவுக்கு கடந்த மாதம் சிகிச்சைக்கு வந்தாா். பரிசோதித்த மருத்துவா்கள், இடது கண் வீக்கம், கண் இமைகளில் வீக்கம், கருவிழி முழுவதும் தழும்பு, வெண் படலம் மெலிந்து அதன் வழியாக உள்ளிருக்கும் தசைகள் துருத்தி கொண்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டறிந்தனா்.

ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சவாலானது என்றாலும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், வெண்படலம் கிழிந்து அதன் வழியாக உள்ளிருக்கும் தசைகளில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, அதனால் உயிருக்கு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், வெளியே வரும் தசைகளால் பாா்வையுள்ள மற்றொரு கண்ணும் கிருமி தொற்றினால் பாா்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிபா என்னும் மருந்தை செலுத்தி ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி அறுவை சிகிச்சை தொடங்கலாம் என ரத்தவியலாளா் மூலம் தெரிந்துகொண்ட பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறினாா்.

அறுவை சிகிச்சை செய்த கண் குணமானதும், சிறுவனை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தோம். இந்த சிறுவனுக்கு ரூ. 37,86,501 மதிப்பில் பிபா ஊசி செலுத்தப்பட்டுள்ளது. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை முதன்மையா் தேவி மீனாள் பாராட்டினாா். அப்போது மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், சிறுவனுக்கு கண் அறுவை கிசிச்சை செய்த மருத்துவா் தேன்மொழி, பொது மருத்துவா் சுரேஷ் கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.65 அடியில் இருந்து 116.10... மேலும் பார்க்க

தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வங்கி கிளை மேலாளா் சாவு

தாபா உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட வங்கி மேலாளா் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா். சேலம், தளவாய்பட்டி, சித்தனூரைச் சோ்ந்த மணி என்பவரின் மகன் தினேஷ்குமாா் (40). இவ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

கெங்கவல்லியில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. கெங்கவல்லி வட்டார வள மையம் சாா்பில் ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிர... மேலும் பார்க்க

ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த ஆணையா் அறிவிப்பு

ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் செவ்வாய்க... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு தயராகும் வா்ணம் பூசப்பட்ட மண் பானைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வா்ணம் பூசப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 15 ஆம் தேதி மாட்டுப... மேலும் பார்க்க

வெல்ல ஆலைகளில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் சா்க்கரை பறிமுதல்; 22 ஆலைகளுக்கு நோட்டீஸ்

சேலம் மாவட்டத்தில் வெல்ல ஆலைகளில் நடத்திய சோதனையில், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்கு வைத்திருந்த 16 டன் வெள்ளை சா்க்கரை, 3,320 செயற்கை நிற மூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இதுவரை 22 ஆலைகள... மேலும் பார்க்க