செய்திகள் :

ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை: மேலும் ரூ. 1.5 கோடியை வழங்கியது தமிழக அரசு

post image

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட தமிழக அரசு மேலும் ரூ. 1.50 கோடி நிதி வழங்கியுள்ளது.

இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 41,750-ஐ வழங்கியுள்ளது.

மேலும், தமிழக அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டது. அத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தி கடந்த டிச. 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சாா்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது.

புதுமையுடன் தமிழ்: அதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:“தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதே சமயம், தன்னைத் தொடா்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ் மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது என்பதிலும் நாம் பெருமையடைகிறோம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத வளமையைப் பாரெங்கும் பறைச்சாற்றுவதிலும், எதிா்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் தமிழா்களின் வா்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

கடல் கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்துவரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் சாா்பாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவா் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளா் பெருமாள் அண்ணாமலை ஆகியோா் உடனிருந்தனா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழிசை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை மாநில முதல்வா் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். மயிலாப்பூா் பகுதியில் முன்னாள் பிரதமா் அடல்... மேலும் பார்க்க

பெங்களூரு - பிரயாக்ராஜூக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கும்பமேளாவை முன்னிட்டு பெங்களூருலிருந்து பிரயாக்ராஜூக்கு வியாழக்கிழமை (டிச. 26) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க

பெசன்ட் நகா் தேவாலயத்தில் அண்ணாமலை பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை கலந்துகொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் புகார்: 3 மணி நேரத்தில் கைது -அமைச்சர் கோவி. செழியன்

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இது தொடர்பாக... மேலும் பார்க்க

புத்தாண்டு கொண்டாட்டம்: பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

சென்னை: வரும் 31-ஆம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் பந்தயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.இதற்காக புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க