செய்திகள் :

``ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் இல்லையா?'' - பெட்ரோல் பங்கில் மின்சாரத்தை நிறுத்திய லைன்மேன்..!

post image

உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைக்கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற விதியை கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரபிரதேச மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஹாப்பூர் மாவட்ட ஆட்சியர் `ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விநியோகம் செய்யக்கூடாது’ என்று அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, அங்கிருந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விநியோகம் செய்யாமல் இருந்தனர்.

பெட்ரோல் பங்கில் மின்சாரத்தை நிறுத்திய லைன்மேன்

இந்நிலையில், ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்ப ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த மின்சாரத்துறை லைன்மேன் ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பச் சொல்லி இருக்கிறார். உடனே பங்க் ஊழியர், ‘ஹெல்மெட் இல்லை என்றால், பெட்ரோல் இல்லை’ என்று கூறி பெட்ரோல் நிரப்ப மறுத்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் நிரப்பக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமாக அந்த இடத்தை விட்டு கிளம்பினார் அந்த லைன்மேன். அவர் சென்ற பிறகு அந்தப் பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கு இருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அந்த பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு மின்விநியோகம் சீரானது. இது குறித்து அந்தப் பெட்ரோல் பங்க் உரிமையாளர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இது குறித்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், பெட்ரோல் பங்க் நிலையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அந்த லைன்மேன் ஏறி மின்சார விநியோக கம்பியை துண்டித்ததை CCTV கேமராக்கள் மூலம் பார்த்து உள்ளனர்.

இதனை அறிந்து ஹாப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற புதிய விதி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய போர்டுகளில் விழிப்புணர்வு பதாகைகளை பெட்ரோல் பங்க் நிலையத்தில் அமைக்க வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் பங்க் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய ஊழியரின் செயலால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை, அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை; 6 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் 17 வயது பட்டியலினச் சிறுவனை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கி, இழிவுபடுத்தி தீண்டாமை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

ஷாரோன் ராஜ் கொலை: கருணை கடிதம் எழுதிய கிரீஷ்மா; அரசு வக்கீல் ஆவேசம்... நாளை வெளியாகும் தீர்ப்பு..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் - பிரியா தம்பதியின் மகன் ஷாரோன் ராஜ். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் கிரீஷ்மா(24). கன்னியாகும... மேலும் பார்க்க

பயணிகளை வைத்துக்கொண்டே விபரீத மோதல் - அத்துமீறிய கோவை தனியார் பேருந்துகள்

கோவை - பொள்ளாச்சி வழித்தடத்தில் ஏராளமான தனியார் பேருந்துகள் உள்ளன. தொழில் போட்டியில் அவர்கள் அதிவேகமாக செல்வதுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதும் வழக்கம். பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையி... மேலும் பார்க்க

Saif Ali Khan: சைஃப் அலிகானை கொடூரமாக தாக்கியது ஏன்? - கைதான வங்கதேச ஆசாமி பகீர் வாக்குமூலம்!

சைஃப் அலிகானை தாக்கியது ஏன்? மும்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் புகுந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தே... மேலும் பார்க்க

``கணவருடன் சேர்ந்து வாழ பரிகாரம்'' -நடக்காததால் ஜோதிடர் கொலை... பெண்ணுடன் முகநூல் நண்பர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (64). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளார், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்... மேலும் பார்க்க

Saif Ali Khan: நடிகர் சைஃப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்... மும்பை அருகில் 2 பேர் கைது!

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடு புகுந்து மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் சைஃப் அலிகானுக்கு உடம்பில் 6 இடங்களில் பிளேடால் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர் உடனே மருத்துவ... மேலும் பார்க்க