செய்திகள் :

ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகி சுட்டுக்கொலை!

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சந்து ராதோட் (வயது 47). இவர், மலக்பேட் பகுதியிலுள்ள பூங்காவின் அருகில் இன்று (ஜூலை 15) காலை, தனது வழக்கமான நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சந்து ராதோடின் மீது மிளகாய் பொடியை வீசி, துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், பலத்த காயமடைந்த சந்து ராதோட், சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்து ராதோடின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டது!

A Communist Party of India official has been shot dead by unidentified assailants in Hyderabad, Telangana.

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி மு... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்... மேலும் பார்க்க

ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: செப்டம்பரில் அடுத்தகட்ட பேச்சு

இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்(எஃப்.டி.ஏ.) மேற்கொள்வது குறித்த அடுத்தகட்ட பேச்சு செப்டம்பரில் நடைபெற உள்ளது. கடந்த 2013-இல் இந்த பேச்சு முடங்கியது. இந்தநிலைய... மேலும் பார்க்க

“ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தமாகிவிட்டார்” - சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர்!

இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சா்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்ப... மேலும் பார்க்க

2030க்குள் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கத் திட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்குப் பிகார் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமையான மருமகனை திருத்த 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த மாமனார்!

லக்னௌ: போதைக்கு அடிமையான மருமகனை அவரது மாமனார் 'தலிபான் ஸ்டைலில்' சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் பீலிபீட் மாவட்டத்தைச் சேர்ர்ந்தவர் முகமது யாமீன், இவர் போதை ப... மேலும் பார்க்க