ஹைதராபாத் எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே பேருந்து தீ: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 35 பயணிகள்!
ஹைதராபாத் (தெலங்கானா):ஹைதராபாத்தில் உள்ள எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 35 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
தெலங்கான மாநிலம், ஹைதராபாத் எஸ்ஆர் மெட்ரோ நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ஒரு தனியார் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து பேருந்தில் இருந்த 35 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டுள்ளனர். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்தது
இது தொடர்பாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து ஜூபிலி ஹில்ஸ், சனத் நகர் மற்றும் செயலகத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்து 35 பயணிகளும் பாதுகாப்பாக விரைந்து வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
பேருந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.