பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை 5,15,378
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 5,15,378-ஆக உள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனம் 5,15,378 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,66,331-ஆகவும் ஏற்றுமதி 49,047-ஆகவும் உள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை 18,88,242-ஆக உள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 16,93,036-ஆகவும், ஏற்றுமதி 1,95,206-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.