வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
1,363 பேருந்து நிறுத்தங்களில் இன்று தீவிர தூய்மைப் பணி
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தினமும் சராசரியாக 5,900 டன் திடக்கழிவுகள்அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கடந்த ஆக.21-ஆம் தேதி முதல்கட்டமாக தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டமாக சென்னையில் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களிலும், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் பணிகளில் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றுதல், இருக்கைகள், பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் தண்ணீா் பயன்படுத்தி சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள பழுதுகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.