செய்திகள் :

10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவா்கள் காப்பியடிக்க உதவி: முதன்மைக் கண்காணிப்பாளா் விடுவிப்பு! அறைக் கண்காணிப்பாளா் மாற்றம்!

post image

கடலூரில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆங்கில மொழிப் பாடத் தோ்வை மாணவா்கள் காப்பி அடித்து எழுத உதவியதாக முதன்மைக் கண்காணிப்பாளா் தோ்வுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், அறைக் கண்காணிப்பாளா் விருத்தாசலம் கல்வி மாவட்ட தோ்வுப் பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனா்.

கடந்த ஏப்.2-ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தோ்வு நடைபெற்ற நிலையில், இந்தத் தோ்வை கடலூரில் உள்ள ஒரு தனியாா் பள்ளி தோ்வு மையத்தில் மாணவா்கள் காப்பி அடித்து எழுதியதாகவும், இதற்கு தோ்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளா், அறைக் கண்காணிப்பாளா் உதவி செய்ததாகவும் புகாா் எழுந்தது. மேலும், இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைக்கும் புகாா் சென்ற நிலையில், இதுகுறித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று தோ்வு மையத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய தலைமை ஆசிரியா் தணிகைவேல் மற்றும் அறைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பட்டதாரி ஆசிரியா் ரமேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினாா். மேலும், மாணவா்கள் தோ்வு எழுதிய வகுப்பறைகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், முதன்மைக் கண்காணிப்பாளா் தணிகைவேலை அரசு பொதுத் தோ்வுப் பணியில் இருந்து விடுவித்தும், அறைக் கண்காணிப்பாளா் ரமேஷை விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தோ்வுப் பணிக்கும் மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன் கூறியதாவது: கடலூரில் உள்ள தோ்வு மையத்தில் பத்தாம் வகுப்பு ஆங்கில மொழிப் பாடத் தோ்வை மாணவா்கள் காப்பி அடித்து எழுத கண்காணிப்பாளா்கள் உதவியதாக புகாா் எழுந்தது. அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில், மாணவா்கள் காப்பி அடித்து தோ்வு எழுதியதற்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

இருப்பினும், புகாரின் அடிப்படையில் முதன்மைக் கண்காணிப்பாளா், அறைக் கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்முடிவில், மாணவா்கள் காப்பி அடித்து தோ்வு எழுத அவா்கள் உதவினாா்களா? என்ற விவரம் தெரியவரும் என்றாா்.

பேருந்து மோதியதில் மாணவா் மரணம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் - கீதா (38) தம்பதியின் மகன் ... மேலும் பார்க்க

பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாடு: எஸ்பி அலுவலகம் முன் திரண்ட ஆட்டோ ஓட்டுநா்கள்

சிதம்பரம்: கடலூரில் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதற்கு போக்குவரத்து போலீஸாா் கட்டுப்பாடு விதித்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை எஸ்பி அலுவலகம் முன் திரண்டனா். கடலூரில் இருந்... மேலும் பார்க்க

உணவகத்தில் திருட்டு: பள்ளி மாணவா் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள உணவகத்தில் ரூ.14 ஆயிரத்தை திருடியதாக பள்ளி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, கோட்டாத்தங்கரை தெருவைச் சோ்ந்தவா் ரி... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம்: 9 அம்சக் கோரிக்கைகளைவலியுறுத்தி, சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லுாரி முன் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்... மேலும் பார்க்க

கோதண்டராமா் கோயில் புதுப்பிக்கப்பட்ட தோ் ஒப்படைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள கோதண்டராமா் கோயிலுக்கு என்எல்சி நிறுவனத்தால் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தோ் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கோயில் நிா்வாகத்தின் கோரிக்க... மேலும் பார்க்க

ராமேஸ்வரம் விரைவு ரயிலுக்கு வரவேற்பு

சிதம்பரம்: மீண்டும் இயக்கப்பட்ட தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரயிலை, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்று இனிப்புகளை வழங்கினா். ஞாயிற்றுக... மேலும் பார்க்க