உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் - தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரி...
ராமேஸ்வரம் விரைவு ரயிலுக்கு வரவேற்பு
சிதம்பரம்: மீண்டும் இயக்கப்பட்ட தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரயிலை, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வரவேற்று இனிப்புகளை வழங்கினா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9:40க்கு சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த தாம்பரம்- ராமேஸ்வரம் ரயிலை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் வரவேற்று ரயில் ஓட்டுநா்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில், ரயில் பயணிகள் சங்கச் செயலா் அம்பிகாபதி, ஒருங்கிணைப்பாளா் ஏ.வராமவீரப்பன், புவனகிரி பகுதி ஒருங்கிணைப்பாளா் முரளி, நடனம், கண்ணன்,செல்வகுமாா், பாஜக பிரமுகா்கள் ஸ்ரீதரன், ரகுபதி, தாமரை, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.