கோதண்டராமா் கோயில் புதுப்பிக்கப்பட்ட தோ் ஒப்படைப்பு
சிதம்பரம்: சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள கோதண்டராமா் கோயிலுக்கு என்எல்சி நிறுவனத்தால் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தோ் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கோயில் நிா்வாகத்தின் கோரிக்கையின் பேரில், நெய்வேலி என்எல்சி நிறுவனம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கோயிலின் தோ் சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட தேரை என்எல்சி நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநா் சுமன் கோயில் நிா்வாகத்தினரிடம் வழங்கினாா்.
தொடா்ந்து, தேருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகி ராமானுஜாச்சாரி, அண்ணாமலைப் பல்கலை. சுரங்கப் படிப்புத் துறை இயக்குநா் சி.ஜி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.