செய்திகள் :

10,000 புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்- அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறாா்

post image

புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

தில்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் புதிய கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள், மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் ரூபே விவசாய கடன் அட்டைகள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கவுள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்பட அரசு உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிராமங்கள்தோறும் சென்றடைவதை உறுதிபடுத்தவும், பஞ்சாயத்துகளில் விவசாயக் கடன் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் நோக்கிலும் இந்த சங்கங்கள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

10,000 புதிய கூட்டுறவு சங்கங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ... மேலும் பார்க்க

நிதிப் பற்றாக்குறையை 4.5%-ஆக குறைக்க நடவடிக்கை: மத்திய நிதியமைச்சகம் அறிக்கை

ஆக்கபூா்வ செலவினம், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், அடுத்த நிதியாண்டில் (2025-26) நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைத்தல் ஆகியவை மீது தொடா்ந்து கவனம் செலுத்தப்படும் என்று மத்திய நிதிய... மேலும் பார்க்க

மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமனம்

மத்திய வருவாய் துறைச் செயலராக அருணீஷ் சாவ்லா நியமிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய் துறைச் செய... மேலும் பார்க்க

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!

பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார்.அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ... மேலும் பார்க்க

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை!

பத்தனம்திட்டை : சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்க அங்கி, மலை மேல் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்ப சுவாமி விக்கிரகத்துக்கு அணிவிக்கப்பட்டது. திருவிதாங்கூர் அரச பரம்பரையால் ஐயப்ப சுவாமிக்கு ஆண்... மேலும் பார்க்க

1500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 4 பேர் பலி!

உத்தரகண்ட்டில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் விழுந்து 4 பேர் பலியாகினர்.உத்தரகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் இருந்து, பயணிகள் பேருந்து புதன்கிழமை (டிச. 25) மதியவேளையில் நைனிதல் மாவட்டம் ... மேலும் பார்க்க