10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகள் முன்னணி; டாப் 5 மாவட்டங்கள்; ரிசல்ட் விவரங்...
10, 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: இன்று வெளியாகிறது!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிடப்படவுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளையும், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தோ்வு முடிவுகளையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிடவுள்ளாா். இதையடுத்து மாணவா்கள் https://tnresults.nic.in/ என்ற இணையதளத்தில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவா்களுக்கு கைப்பேசி எண்ணுக்கும், தனித்தோ்வா்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.
கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 9,13,036 பேரும், பிளஸ் 1 பொதுத் தோ்வை 8.23 லட்சம் பேரும் எழுதினா்.